சொகுசு கேரவனில் நீதிமன்றத்திற்கு வந்த ராக்கெட் ராஜா; சட்டமன்ற தேர்தலில் போட்டி என அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சொகுசு கேரவன் வாகனத்தில் வந்த ராக்கெட் ராஜா வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Share this Video

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நீதிமன்றத்திற்கு வருபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது அங்கு சொகுசு கேரவன் வாகனத்தில் வந்த ராக்கெட் ராஜா வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரானார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்க வாய்ப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Related Video