Watch : தீபாவளி விற்பனை - நெல்லையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை படுஜோர்!

நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 

First Published Oct 18, 2022, 1:45 PM IST | Last Updated Oct 18, 2022, 1:45 PM IST

நெல்லை நகரில் மேலப்பாளையம் கால்நடை சந்தை மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தையாகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த சந்தை செயல்படும். இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் தங்களுடைய ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வதுண்டு. 

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படஉள்ளது. இந்த நிலையில் அன்றைய தினம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் புத்தாடைகள் உடுத்தியும், அசைவ உணவுகள் சமைத்து, உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள். இதை முன்னிட்டு, இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்தது. 

Watch : தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்ட சோதனை ஓட்டத்திற்கு எதிர்ப்பு! - விவசாயிகள் போராட்டம்!
 

சிறிய குட்டி ஆடு 3000 ரூபாய் முதல் பெரிய ஆடு 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இறைச்சி கடை வியாபரிகள் இன்று காலையிலிருந்து  கால்நடை சந்தையில் குவிந்து இருந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான கால்நடைகளை வாங்கினர். இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கூறுகையில், ''இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆடுகளை மிகக் குறைந்த விலைக்கு இறைச்சி கடைக்காரர்கள் கேட்டனர். நாங்கள் காலையிலேயே இங்கு வந்து விட்டோம். இந்த ஆண்டு ஆடு விற்பனை அமோகமாக இருந்தது. சிறிய ஆட்டுக்குட்டி 3000 ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது'' என தெரிவித்தனர். இதேபோல் மேலப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளிலும் நாட்டுக்கோழி, வாத்து விற்பனையும் அமோகமாக நடந்தது

Video Top Stories