Asianet News TamilAsianet News Tamil

நீ எல்லாம் ஒரு அமைச்சரா? அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க முயன்ற திமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன?

மாவட்ட செயலாளர் ஒன்றும் செய்ய முடியாது நான்தான் பொறுப்பாளர்களை நியமிப்பேன் அதற்காக தான் தலைவர் என்னை அனுப்பி உள்ளார் என கடும் கோபத்தில் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் சிலர் அமைச்சரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. 

நெல்லை திமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அக்கட்சி நிர்வாகிகள் தாக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டத்தை பாதியிலேயே முடித்து கொண்டு பாதுகாப்புடன் அமைச்சர் வெளியேறினார். 

நெல்லை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்சுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியான திமுக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் திமுக கூட்டணி சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா கிருஷ்ணன் திமுக நகர செயலாளர் ஜான் கென்னடி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில் கூட்டத்தில் திடீர் கைகலப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க: புதுவை வேட்பாளர் நமச்சிவாயம் எத்தனை கட்சிதான் மாறுவார்.? லிஸ்ட்டை பார்த்தால் தலையே சுற்றுகிறது- மு.க ஸ்டாலின்

அதாவது திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர்.ஜெகதீஷ் ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி உள்பட சிலரை தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கு சக திமுக நிர்வாகிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களில் பலர் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள் எனவே அவர்களை நியமிக்க கூடாது என அமைச்சரை கேட்டுள்ளனர். மேலும் மாவட்ட செயலாளர்கள் தான் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் நீங்கள் நியமிக்க கூடாது என கூறினர்.

இதையும் படிங்க: வாரிசு அரசியலில்கூட பெண்களை புறக்கணிப்பதுதான் திராவிட மாடல்! ஆனால் பிரதமர் மோடி! போட்டு தாக்கும் வானதி!

அதற்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் ஒன்றும் செய்ய முடியாது நான்தான் பொறுப்பாளர்களை நியமிப்பேன் அதற்காக தான் தலைவர் என்னை அனுப்பி உள்ளார் என கடும் கோபத்தில் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகிகள் சிலர் அமைச்சரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் கூட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  பின்னர் அமைச்சரை அங்கிருந்து திமுக நிர்வாகிகள் கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர். நீ எல்லாம் ஒரு மந்திரி மானங்கெட்ட மந்திரி என ஒருமையில் பேசியுள்ளனர் உடனே அமைச்சர் அங்கிருந்து நைசாக வெளியேறினர். பின்னர் போலீசார் அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Video Top Stories