புதுவை வேட்பாளர் நமச்சிவாயம் எத்தனை கட்சிதான் மாறுவார்.? லிஸ்ட்டை பார்த்தால் தலையே சுற்றுகிறது- மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு போன்ற மாநிலமாக இருந்தால் அதை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும். புதுச்சேரி போன்ற மாநிலமாக இருந்தால் அது கிராம பஞ்சாயத்து ஆக மாற்ற வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைவரும் டெல்லி கீழே இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

Stalin said that Puducherry will be given separate state status when the India alliance comes to power KAK

புதுச்சேரி- ஆளுநரின் குறுக்கீடுகள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், புதுச்சேரி மக்களுக்கான அடிப்படை வசதிகளை பாஜக அரசு செய்து கொடுக்கவில்லை. நியாயவிலைக்கடையில்  அரிசியை தடை செய்தார்கள்.  வேட்டி,  சேலை திட்டத்தை முடக்கினார்கள். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு ஒத்துழைக்காமல் அரசியல் சட்ட கடமையை காற்றில் பறக்க விட்டார்கள் 

Stalin said that Puducherry will be given separate state status when the India alliance comes to power KAK

நாங்களும் ஆளுநரிடம் மாட்டிக்கொண்டுள்ளோம்

இப்படி செயல்பட்டது யார் என்றால் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி. ஐபிஎஸ் ஆக இருந்தவர், சட்டத்தை காக்க வேண்டிய அவரே துணை நிலை ஆளுநராக மாறிய பின் சட்டத்தை மீறி செயல்பட்டார். தமிழ்நாட்டில் ஒரு ஆளுநர் உள்ளார் அவரிடம் மாட்டிக் கொண்டு நாங்கள் முழித்துக் கொண்டிருக்கிறோம். அவரும் ஐபிஎஸ் ஆக இருந்தவர் தான் நான் பல நேரங்களில் கூறுவது உண்டு அவரே தமிழகத்தின் ஆளுநராக இருக்க வையுங்கள் என்று,  ஆளுநர் ஆர்.ஆர் ரவி இருப்பதன் காரணமாகத்தான் திமுகவுக்கு ஆதரவாக மிகப்பெரிய பிரச்சாரமே நடைபெற்றுக் கொண்டு வருகிறது. காவல்துறையில் பதவி காலம் முடிந்த பிறகு அவர்களை எல்லாம் ஆளுநராக மாற்றி விடுகிறார்கள். அரசியல் சட்டத்தை மீறி பாஜகவின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகிறார்கள். 

டெல்லிக்கு கீழே இருக்க வேண்டும்

 விளம்பரத்திற்காக செயல்படுகிறார்கள் ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு மட்டுமே என்று நினைக்காதீர்கள்.  அதில் புதுச்சேரி  மாநிலம் விதிவிலக்கு, பாஜக கூட்டணியில் உள்ள ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடிகள். பாஜகவை பொறுத்தவரை புதுச்சேரியின் முன்னேற்றம் மக்களின் வளர்ச்சி என்பதையெல்லாம் பார்ப்பது இல்லை. அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் அதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.  இதுதான் பாஜகவின் கொள்கை, தமிழ்நாடு போன்ற மாநிலமாக இருந்தால் அதை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும். புதுச்சேரி போன்ற மாநிலமாக இருந்தால் அது கிராம பஞ்சாயத்து ஆக மாற்ற வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைவரும் டெல்லி கீழே இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தனது கைபிடிக்கு வைத்துள்ளது பாஜக.  கைப்பாவையாக உள்ள புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை வைத்துள்ளது. 

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை பெற்று தருவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதையேதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் எதிரொலித்துள்ளது. புதுச்சேரி மக்களின் பலநாள் கனவான புதுவைக்கு மாநில அந்தஸ்து ஜூன் நான்காம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு கனவு நினைவாகும் என தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அதிகம், மின்சார துறையே தனியாருக்கு தாரை வார்க்க பார்க்க சதி திட்டம் நடைபெற்றுள்ளது. மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. 

Stalin said that Puducherry will be given separate state status when the India alliance comes to power KAK

பாஐகவின் ரிப்போர்ட் கார்டு எங்கே.?

புதுச்சேரிக்கு புதிய புதிய ஆளுநர்களை வரவழைத்து அரசியல் கூத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகிறது பாஜக. கிரண்பேடி காமெடி முடிந்ததும் வேறொருவர் வந்தார். சகோதரி தமிழிசை வந்தார்கள்.  புதுச்சேரியில் வந்து உட்கார்ந்து கொண்டு தமிழக அரசியலை பற்றி தமிழிசை பேசிக் கொண்டிருந்தார். தேர்தல் வந்ததும் பாஜகவிற்கே திரும்பி சென்று விட்டார். புதுச்சேரி வரலாற்றிலேயே ராஜ் பவன் வாசலில் முதலமைச்சர் போராட்டமே நடத்தியுள்ளார்.  புதுவையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரிப்போர்ட் கார்டு எல்லாம் கேட்டார்.  இப்போ பாஜக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகள் ரிப்போர்ட் கார்டு எங்கே.?  நாராயணசாமி கட்சி மேலிடத்தின் பேச்சை கேட்டு செயல்படுவதாக கிரண்பேடி குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது வேறு கட்சி முதல்வரான ரங்கசாமியை எங்கள் பேச்சு கேட்க சொல்லி பாஜக நிர்பந்திக்கிறது.

புதுவை முதல்வர் ஆளுதான் உயரம், உயரத்துக்கு தகுந்த அறிவு இருக்க வேண்டும். உயரத்துக்கு தகுந்த சுயமரியாத இருக்க வேண்டும். இன்று புதுச்சேரியில் முதலமைச்சராக இருப்பது ரங்கசாமி, இந்த கூட்டணியின் பெரிய கட்சி ரங்கசாமி கட்சி, ஆனால் தேர்தலில் போட்டியிடுவது பாஜக. புதுவையில் பாஜக போட்டியிடுக்கிறது என்று அவரது வாயாலேயே கூற வைத்தது பாஜக,  ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்க காரணமே நமச்சிவாயம் தான். இப்போ ரங்கசாமி நமச்சிவாயத்துக்கு ஓட்டு கேட்டு வரும் நிலையை பாஜக உருவாக்கி உள்ளது. ரங்கசாமியின் கட்சியையே பாஜக கண்ட்ரோலில் வைத்திருப்பது தான் ஜனநாயகமா.?

Stalin said that Puducherry will be given separate state status when the India alliance comes to power KAK

எத்தனை கட்சி மாறுவார்.?

உள்துறை அமைச்சராக சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தவரை வேடாபாளராக  நிறுத்தி உள்ளது பாஜக. நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறி உள்ளார் என்று லிஸ்ட்டை பார்த்தால் எனக்கே தலை சுற்றுகிறது. திமுகவில் இருந்த நமச்சிவாயம் மதிமுகவிற்கு தாவினார்.  மதிமுகவிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அங்கிருந்து புதுவை காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.

மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்று அங்கிருந்து இருந்து மீண்டும் காங்கிரஸுக்கு வந்தவர் தற்போது பாஜகவிற்கு தாவியுள்ளார். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து வந்தால் நமச்சிவாயம் எந்த கட்சியில் இருப்பாரோ.? யாமறியின் பராபரமே என கூறிய ஸ்டாலின், 
எந்த கட்சியில் இருப்போம் என இது நமச்சிவாயத்திற்கே தெரியாது விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

மோடி போல் ஒரு நடிகரே இல்லை..சிவாஜி இருந்திருந்தால் செவாலியர் பட்டத்தை மோடியிடம் கொடுத்திருப்பார் - முத்தரசன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios