MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!

சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் கக்கன் வரிசையில் தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஐயா நல்லகண்ணு. இப்படி ஒரு தலைவர் இனி அரசியல் களத்தில் வரப்போவதில்லை என 100 சதவீதம் உறுதியாக சொல்லலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Feb 25 2026, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அரசியலில் ஓர் அதிசயம் ஐயா நல்லகண்ணு
Image Credit : Asianet News

அரசியலில் ஓர் அதிசயம் ஐயா நல்லகண்ணு

ஊரை அடித்து உலையில் போடும் அரசியல் களத்தில் அத்திபூத்தாற்போல் எப்போதாவது ஒருமுறை தான் நல்ல தலைவர்கள் வருவார்கள். அந்த வகையில் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் கக்கன் வரிசையில் இடம் பெற்றவர் ஐயா நல்லகண்ணு. 

தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்த ஐயா நல்லகண்ணு, அரசியலில் அதியசமாக பணம், பதவி, புகழ் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை. இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து இருந்தாலும் ஒருபோதும் அவர் பணம் மீது நாட்டம் கொண்டதில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரூ.1 கோடியை திருப்பி கொடுத்தவர்
Image Credit : Asianet News

ரூ.1 கோடியை திருப்பி கொடுத்தவர்

கட்சி சார்பாகவும், அரசு சார்பாகவும் தனக்கு கிடைத்த பணம், ஆடம்பர பொருட்களை அவர் கட்சிக்கும், மக்களுக்கும் தான் திருப்பி கொடுத்து வந்தார். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. நல்லகண்ணுவின் 80வது பிறந்தநாளில் கட்சி சார்பாக அவருக்கு ரூ.1 கோடி பணமும், ஆடம்பர காரும் பரிசளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்ட அவர் அடுத்த நொடியே 'இது கட்சியின் பணம்; எனக்கெதுக்கு?' என்று கூறி அதை திருப்பி கொடுத்து விட்டார்.

ரூ.10 லட்சத்தை அரசுக்கே திருப்பி வழங்கினார்

அண்மையில் தமிழக அரசு நல்லகண்ணுவுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கியது. அத்துடன் ரூ.10 லட்சம் தொகையும் வழங்கப்பட்டது. ஆனால் இதைபெற்றுக்கொண்ட அடுத்த நொடியே அதனையும், தான் வைத்திருந்த ரூ.5,000யும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி வழங்கினார் இந்த நேர்மையின் சிகரம். இது மட்டுமின்றி அவருக்கு பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுத்தொகைகளையும் கட்சியின் நலனுக்காவும், பொது நலனுக்காகவும் வழங்கினார்.

34
ரூ.2,000ல் வாழ்க்கை நடத்தினார்
Image Credit : Asianet News

ரூ.2,000ல் வாழ்க்கை நடத்தினார்

கோடி கோடியாய் சொத்துகள் சேர்த்துக் கொண்டு பணம், புகழ், பதவியில் மிதக்கும் நவீனகால அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ஒரு ரூபாய் கூட சொத்து சேர்க்காமல் அரசியலில் அதியசமாய் விளங்கினர் நல்லகண்ணு. 

கடந்த 2011 தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில் தன்னிடத்தில் வெறும் ரூ.5,000 மட்டுமே கையிருப்பு இருப்பதாக கூறியிருந்தார். சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் அவருக்கு மாதம்தோறும் வழங்கப்பட்ட தியாகிகள் ஓய்வூதியத் தொகையான ரூ.2 ஆயிரத்தை தன்னுடைய செலவுகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்.

44
அரசு மருத்துவமனையில் சிகிச்சை; அரசு பேருந்தில் பயணம்
Image Credit : our own

அரசு மருத்துவமனையில் சிகிச்சை; அரசு பேருந்தில் பயணம்

மேலும் கட்சி சார்பாக வழங்கப்பட்ட மிகக்குறைந்த ஊக்கத்தொகையையும் பெரும்பாலான நேரங்களில் கட்சியின் நலனுக்கே வழங்கி விட்டார். இது மட்டுமின்றி ஆரம்பட உடைகளை தவிர்த்த அவர் எப்போதும் வெள்ளை வேட்டி, சட்டையில் எளிமையாக வலம் வருவார். அரசு பேருந்துகளையே பயன்படுத்தியே எங்கும் செல்வார். 

இவ்வளவு ஏன் உடல்நிலை சரியில்லாதபோதும் கூட தனியார் மருத்துவனைகளை நாடாமல் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவேன் என்பதில் பிடிவாதமாக இருந்து, அங்கு இருந்தே நம்மை விட்டு பிரிந்துள்ளார் ஐயா நல்லகண்ணு. இப்படி ஒரு தலைவர் இனி அரசியல் களத்தில் வரப்போவதில்லை என்பதை நாம் 100% உறுதியாக சொல்லலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
அரசியல்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Pooja Time : தீபாவளி 2026..பூஜை நேரம், சுப முகூர்த்தம், எண்ணெய் குளியல், முழு விவரம்!
Recommended image2
Now Playing
கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு: மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து!
Recommended image3
Now Playing
அரசியல் பேச வரல, உங்க அண்ணனா வந்திருக்கேன் ! கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் அதிரடி பேச்சு
Related Stories
Recommended image1
சிகரெட்டால் பொசுக்கப்பட்ட மீசை... யாரும் அறியாத நல்லகண்ணு-வின் மறுபக்கம்..!
Recommended image2
Nallakannu Passed away: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு காலமானார்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved