காமராஜர் பிறந்தநாளில் தொடங்கப்பட்ட தளபதி விஜய் பயிலகம்.. விஜய் மக்கள் இயக்கத்தினர் திறப்பு

மயிலாடுதுறை அருகே கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக விஜய் பயிலகம் தொடங்கப்பட்டுள்ளது.

Share this Video

கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் விஜய் பயிலகம் தொடங்கப்படும் என்று நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பாக கொண்டாடினர். 

பல்வேறு இடங்களில் காமராஜர் சிலை மற்றும் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர். தொடர்ந்து மயிலாடுதுறை அருகே ஐவநல்லூர் ஊராட்சி சோத்தமங்கலம் கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் பயிலகம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள் மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி விஜய் பயிலகத்தை தொடங்கி வைத்தனர்.

20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பயிலகத்தில் கல்வி பயின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தினர் கல்வி கற்க பயிலகம் வந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு மாதாமாதம் ஊதியம் வழங்குவதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !

Related Video