பிறந்தநாளுக்காக கோவிலுக்கு வந்த எச்.ராஜாவை சாமி கும்பிட விடாமல் திருப்பி அனுப்பிய பாஜக தொண்டர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தநாளை முன்னிட்டு கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முன்னிலையில் தொண்டர்கள் மோதிக் கொண்டதால் அவர் சாமி கும்பிடாமல் திரும்பி சென்றார்.

First Published Sep 30, 2023, 11:26 AM IST | Last Updated Sep 30, 2023, 11:26 AM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மணிமந்திர விநாயகர் கோவிலுக்கு பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சென்றார். பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்பொழுது அங்கு கூடிய பாஜக நிர்வாகிகள் அவர் முன்னிலையில் வாக்குவாதம் செய்து கொண்டார்கள். 

இதை பார்த்த எச். ராஜா அவர்கள் அமைதியான முறையில் இருந்தால் நான் இறங்கி வருவேன், இல்லையென்றால் சென்றுவிடுவேன் என்று கூறினார். அப்பொழுது இரு பிரிவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு பிரிவினரின் சட்டை கிழிக்கப்பட்டது. இதை பார்த்த எச்.ராஜா உடனடியாக அங்கிருந்து சுவாமி தரிசனம் செய்யாமலேயே புறப்பட்டுச் சென்றார்.

Video Top Stories