முதியோர் உதவித்தொகை; தலைக்கு 50 ரூபாய் - கறாராக கேட்டு வாங்கும் பெண் ஊழியர்

சேலத்தில் முதியோர் உதவித் தொகை வழங்க நபர் ஒருவருக்கு 50 ரூபாய் வீதம் 1500 பேரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கும் பெண் ஊழியர்.

Share this Video

சேலம் மாநகர் சாமிநாதபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முதியோருக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த தொகை நேற்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள பெண் ஊழியர் ஒருவர் முதியோரிடம் இருந்து கறாராக 50 ரூபாய் வீதம் லஞ்சம் பெற்றுக் கொண்டு 1500 பேருக்கு முதியோர் உதவித் தொகையை வழங்கி வருகிறார். 

இது தொடர்பாக அவர் லஞ்சம் பெறும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Video