Watch : இன்று உலக தண்ணீர் தினம்! -நீரோடையை காணவில்லை கிராம சபை கூட்டத்தில் பெண்கள் புகார்!

சேலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அப்போது நிரோடைய காணவில்லை எனவும் புகார் அளித்தனர்.
 

First Published Mar 22, 2023, 4:15 PM IST | Last Updated Mar 22, 2023, 4:15 PM IST

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது
அதன் ஒரு பகுதியாக சேலம் அயோத்தியபட்டினம் அடுத்து
உள்ள D பெருமாபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊராட்சியில் நீர் வெளியேறும் ஓடையை 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர் இதனால் மழைநீர் கழிவு நீர் வெளியேற முடியாமல் ஊருக்குள் வருவதாகவும் காணாமல் போன நீரோடையை கண்டுபிடித்து தருமாறு பெண்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை உள்ளிட்ட குறைகளையும் தெரிவித்தனர். இந்த கிராம சபை கூட்டத்தில் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இதே போல சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Video Top Stories