சாரி பாஸ் கொஞ்சம் போதை அதிகமாயிடுச்சி; சொகுசு காரை நடுரோட்டில் பார்க் செய்து உறங்கிய குடிமகன்

சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலையில் போதை தலைக்கேறிய நபர் ஒருவர் சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு உறங்கிய சம்பவத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

First Published Oct 14, 2023, 7:56 PM IST | Last Updated Oct 14, 2023, 7:56 PM IST

சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலையில் AVR ரவுண்டானா பகுதியில் சாலையின் நடுவே நீண்ட நேரமாக சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் இருந்த நபர் மது போதையில் காரை ஓட்ட முடியாமல் நடுரோட்டிலேயே நிறுத்தி உறங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை அடுத்து வாகன ஓட்டிகள் காரின் கண்ணாடியை உடைத்து மது போதையில் இருந்த நபரை எழுப்ப முயன்றனர். ஆனால் போதை தலைக்கேறியதால் அவர் எழவில்லை. இதனை அடுத்து மது போதையில் இருந்த நபரின் நண்பர் ஒருவர் அவரை காரிலேயே மாற்றி அமர வைத்து அழைத்துச் சென்றார்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அந்த நபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் அவரை வழி அனுப்பி வைத்தனர்.