கோர விபத்து..! கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்துகொண்டிருந்தபோது, கவனக்குறைவு காரமாக ஏற்பட்ட விபத்தில் 60 வயது மதிக்க ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Video

சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தர் கோவில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, இன்று மதியம் 1 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்துகொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயற்சித்து வண்டியை திரும்பியுள்ளார். எதிரே எதாவது இருசக்கர வாகனம் வருகிறதா என கவனிக்காமல் இருந்ததால், கண் இமைக்கும் நேரத்தில், எதிரே வந்த வாகனம் மீது மோத, சம்பவ இடத்திலே 60 வயது மதிக்க தக்க ஒருவர் பலியானார்.

பின்னர் அருகே இருந்த காவலர் மற்றும் அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் 

தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் நடந்தோ அல்லது வாகனத்திலோ சாலையை கடக்கும் போது மிக கவனமுடன் கடந்து செல்லும் சேலம் மாநகர காவல் துறையினர் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video