Follow us on

  • liveTV
  • அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!

    vinoth kumar  | Published: Jul 4, 2024, 1:09 PM IST

    சேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை உறவினர் வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சண்முகத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், போலீசார், கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சேலம் அரசு மருத்துவமனை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடல் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    Read More

    Video Top Stories

    Must See