போதைப் பொருள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் தீவிரமாக போஸ்டர் கிழிக்கும் பணியில் தமிழக போலீஸ்

பெரம்பலூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை காவல் துறையினர் கிழத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

தமிழகத்தில் போதை பொருளின் புழக்கத்தை தடுக்க தவறியதாகக் கூறி திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் மனிதர் சங்கிலி போராட்டம் குறித்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனை நேற்று நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பெரம்பலூர் நகர பகுதியின் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனைக் கண்ட பெரம்பலூர் நகர கழகச் செயலாளர் ராஜபூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் காவல்துறையினரை கண்டித்து திமுகவிற்கு கைக்கூலியாக செயல்படாமல் தங்களது பணியை செய்ய வேண்டும் எனவும் தங்கள் போஸ்டரை கிழித்தால் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Video