எனக்கு மகன் பிறந்தால் முதல்வரின் பெயரை தான் வைப்பேன்; சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண் நெகிழ்ச்சி

பெரம்பலூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் தமிழக முதலமைச்சரின் பெயர் வைப்பதாக தெரிவித்துள்ளார்.

Share this Video

பெரம்பலுார் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நடத்தி வைத்தார். 

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்டம் அரும்பவூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு என பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாகவும், அதன் படி தற்போது செயல்படுத்தப்படும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளாதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் தமிழக முதலமைச்சரின் பெயரை வைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Video