விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பெண்கள்; கடவுள் ரூபத்தில் வந்து காப்பாற்றிய ஆட்சியர் - பொதுமக்கள் பாராட்டு

பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு போலீஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த மாவட்ட ஆட்சியர் கற்பகம் அவர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Share this Video

பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகளுக்காக வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுக்காக மாவட்ட ஆட்சியர் கற்பகம் சென்றார். உடன் காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் சென்றனர். அப்போது அப்பகுதியில் அந்த வழியே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பெண் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

அதனைப் பார்த்து பதறிய மாவட்ட ஆட்சியர் கற்பகம் காரை விட்டு கீழே இறங்கி காயமடைந்த பெண்ணை பார்த்து ஆறுதல் கூறி காவல் துறை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரை பாராட்டினர்.

Related Video