Watch : குடியிருப்பி நிலம் ஆக்கிரமிக்க முயற்சி! - மீட்டு தருமாறு மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை!

பெரம்பலூர் அருகே தங்கள் குடியிருப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்யும் நபர்களிடமிருந்து மீட்டு தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாற்று திறனாளி பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Dinesh TG  | Published: Apr 17, 2023, 5:51 PM IST

பெரம்பலூர் மாவட்டம், கல் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யம்மாள், வயது 38. மாற்றுத்திறனாளியான இவர், தந்தை கருப்பையா இறந்த நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்கள் வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக கூடுதலாக தங்கள் வீட்டுடன் உள்ள நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணியை நடத்தி வருவதாக அய்யம்மாள் குற்றம்சாட்டியுள்ளார். கணேசன் மீது இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அய்யம்மாள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் புகார் அளித்தார்.

Read More...

Video Top Stories