Asianet News TamilAsianet News Tamil

நீலகிரியில் சுற்றுலா அமைச்சரின் கார் மோதி இளைஞருக்கு எலும்பு முறிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்திபுரம் அருகே குன்னூரில் இருந்து கீழ்நோக்கி வந்த இருசக்கர வாகனம் சுற்றுலாத்துறை அமைச்சரின் கார் மீது மோதியதில் இரு சக்கர வாகன ஓட்டி பலத்த காயமடைந்தார்.

First Published Dec 8, 2023, 2:37 PM IST | Last Updated Dec 8, 2023, 2:37 PM IST

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டம் குந்தா பகுதிக்கு சென்று விட்டு குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அசாருதீன் (வயது 30), சுப்பையா பானு(22) தம்பதியினர் ஊட்டிக்கு சென்றுவிட்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் அசிருதீன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அமைச்சரின் கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அசாருதீன் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர் ராமச்சந்திரன் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மாற்று வாகனத்தில் சென்றார். விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories