தெப்பகாடு சாலையில் குட்டிகளுடன் உலாவந்த காட்டுயானை கூட்டம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு சாலையில் காட்டு யானைகள், குட்டிகளுடன் உலா வருவதை வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

Share this Video

நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் பகுதியில் பிரதான சாலையோரத்தில் உணவு தேடியும், மாயாற்றில் தண்ணீர் குடிக்கவும் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்தன. வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விரும்பி உண்ணும் உணவுகள் குறைந்து காணப்படுகிறது. இது தவிர வனவிலங்குகளுக்கு எதிரான லாண்டனா என்கிற உண்ணிச்செடிகள் அதிகரித்துள்ளது.

இதனால் யானைகள் உணவு தேடி கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் பகுதியை ஒட்டியுள்ள சாலையோரத்தில் முகாமிட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்து செல்கிறார்கள். சிலர் ஆபத்தை உணராமல் வாகனங்களில் இருந்து இறங்கி செல்போனில் படம் எடுத்தும் செல்கின்றனர்.

இதனையடுத்து சுற்றுலா பயணி மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Video