Asianet News TamilAsianet News Tamil

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுப்பு

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 23 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மூன்று மாதத்திற்கு ஒரு முறை இங்கு வளர்க்கப்படும் யானைகளுக்கு எடை பரிசோதனை நடைபெறுவது வழக்கம்,

அதன்படி இன்று தொரப்பள்ளி பகுதியில் உள்ள எடை மேடையில் முதுமலையில் வளர்க்கப்படும் யானைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் இன்று வளர்ப்பு யானைகளான சங்கர், ஜம்பு, வில்சன், சுமங்களா, ஜான், இந்திரா, உதயன், காமாட்சி, பொம்மி, ஆகிய 9 யானைகளுக்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 

இதில் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் கலந்து கொண்டு வளர்ப்பு யானைகளின் எடை மற்றும் உயரத்தை கணக்கெடுப்பு நடத்தினார். மேலும் இன்று மாலை இரண்டு யானைகளுக்கு கணக்கெடுக்கும் பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video Top Stories