Asianet News TamilAsianet News Tamil

ஸ்வச் தீர்த்தம் – சிவன் கோயிலை தூய்மைப்படுத்தும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன்!

மத்திய இணை அமைச்சரான எல் முருகன் கூடலூர் மண்வயல் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சுத்தம் செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள கலராம் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி சுத்தம் செய்து நாடு முழுவதும் உள்ள சிவன் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தான் மத்திய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கோயில்களை தூய்மைப்படுத்தும் நிகழ்வான ஸ்வச் தீர்த்தத்தின் ஒரு பகுதியாக நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, கூடலூர் மண்வயல் கிராமத்தில் வீற்றிருக்கும் சிவன் கோவிலை, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். இந்த வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Video Top Stories