Asianet News TamilAsianet News Tamil

ஊட்டி வானிலை ஆய்வு மைய வளாகத்தில் இரண்டு கருப்பு சிறுத்தைகள்; அதிர்ச்சி வீடியோ!!

ஊட்டி வானிலை ஆய்வு மைய வளாகத்தில் இரண்டு கருப்ப  சிறுத்தைகள் சுற்றி திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியில் இருக்கும் வானிலை ஆய்வு மையம் வளாகத்தில் இரண்டு கருப்பு சிறுத்தைகள் சுற்றி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைக்கும் இதுபோன்ற காட்சியை யாரும் பார்த்தது இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவை கிஷோர் சந்திரன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் பளிச்சென்று சிறுத்தைகளின் கண்கள் விளக்கு ஒளி வெளிச்சத்தில் எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஊட்டியில் இருக்கும் கோல்ப்ஸ் மைதானத்தில் புலி ஒன்று பசுவை அடித்துக் கொன்று சாப்பிட்டுக் கொண்டிருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் கருப்பு சிறுத்தைகள் வீடியோ வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories