கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அவ்வப் போது மிதமான மழை முதல் கன மழை வரை விட்டு விட்டு பெய்து வருகிறது.
நீலகிரி பகுதியில் கொட்டி தீர்த்த கன மழையால் எடப்பள்ளி பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்தது. இதனை தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி அகற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அவ்வப் போது மிதமான மழை முதல் கன மழை வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் கோத்தகிரியில் விடிய விடிய பெய்த பலத்த மழையின் காரணமாக குன்னூர் கோத்தகிரி சாலையில் எடப்பள்ளி பகுதியில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
அதிகாலை நேரம் என்பதால் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டதால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. குன்னூர் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி மரத்தினை அப்புறப்படுத்தினர்.