Watch : ஆக்ரோஷத்துடன் பங்கிற்குள் புகுந்த காட்டெருமை! தப்பிஓடிய ஊழியர்கள்!

கூடலூரில் பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து ஊழியர்களை தாக்க முயன்ற காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
 

First Published Dec 17, 2022, 1:36 PM IST | Last Updated Dec 17, 2022, 1:36 PM IST

நீலகிரி மாவட்டம். கூடலூர் பாஜார் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. வியாழக்கிழமை இரவு தொழிலாளர்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டெருமை ஒன்று, திடீரென பங்கிற்குள் நுழைந்தது. இதனை கண்ட தொழிலாளிகள் அந்த காட்டெருமையை விரட்ட முயன்றனர். இதனால் கோபமடைந்த அந்த காட்டெருமை பங்கில் உள்ளவர்களை ஆக்கிரோஷமாக தாக்க முயன்றது. அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். காட்டெருமை துரத்திய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

Video Top Stories