Watch : உதகை - மைசூர் சாலையில் ஜாலியாக உலா வந்த புலி! பீதியடைந்த சுற்றுலா பயணிகள்!
உதகை மசனகுடியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் உலா வந்த புலியால், சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.
உதகையிலிருந்து மைசூர் மற்றும் கேரள செல்ல முதுமலை புலிகள் காப்பகம் செல்லக்கூடிய மசனகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அடர்ந்த வனப்பகுதி நடுவே செல்லும் சாலை என்பதால் மான் கூட்டங்கள், யானை காட்டு டெருமை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது சாலையை கடக்கும். இச்சாலை வழியே செல்லும் பொழுது வாகனங்களை நிறுத்தவும் ஒலி எழுப்பவும் வனவிலங்குகளுக்கு உணவளிக்க கூடாது என வனத்துறையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மசனகுடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் சாலையில் திடீரென புலி ஒன்று சாலையில் நடந்து சென்றது, இதை சற்றும் எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் புலியை கண்டு பீதிடைந்தனர். சிறிது நேரத்தில் புலி மெதுவாக நடந்து சென்று காட்டுக்குள் மறைந்தது.