Watch : செந்நாயை துரத்திய புலி! புலியை விரட்டிய யானை! முதுமலையில் வைரல் வீடியோ!

முதுமலையில், உணவை தேடி வந்த செந்நாயை புலி துரத்தி வந்ததும், அதனை யானை ஒன்று விரட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

Share this Video

நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வறட்சி நிலவியதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விலங்குகள் அனைத்தும் இடம்பெயர்ந்து நீர்நிலை உள்ள பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளது. தற்பொழுது மழை பெய்துள்ளதால் முதுமலையில் பசுமை திரும்பி உள்ளது இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாகவும் புலி, சிறுத்தை புள்ளிமான்கள் என அனைத்து விலங்குகளும் உற்சாகமாக தனக்கு வேண்டிய உணவுகளை உண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதுமலை பகுதியில் டிரக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் எடுத்த வீடியோ பதிவில் செந்நாய் ஒன்று தனியே உணவு தேடும் பொழுது அதைப் பிடிக்க மின்னல் வேகத்தில் புலி ஒன்று பாய்ந்து ஓடுகிறது. இதன் நடுவே ஒரு ஒற்றை யானை வரவே செந்நாய் உயிர் தப்பியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related Video