Watch : கிணற்றில் விழுந்த காட்டெருமை! - நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்ட வனத்துறை!

குன்னூரில், கிணற்றில் விழுந்த காட்டெருமையை பல மணி நேர போராட்டத்திற்கு பின் ஜேசிபி இயந்திரம் மூலம் வனத்துறையின் மீட்டெடுத்தனர்.
 

First Published Mar 22, 2023, 4:04 PM IST | Last Updated Mar 22, 2023, 4:04 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை அருகே பாழடைந்த கிணற்றில் காட்டெருமை ஒன்று விழுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனவர் முருகன் வனக்காப்பாளர் மோகன் மற்றும் வனக்காவலர் திலீப் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜேசிபி இயந்திரம் மூலம் காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி காட்டெருமையை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்தனர்.