நீலகிரியில் சாவகாசமாக உலா வந்த ஒற்றை கரடி; குடியிருப்பு வாசிகள் வனத்துறைக்கு கோரிக்கை

நீலகிரியில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் ஒற்றை கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Video

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் வர தொடங்கியுள்ளன. இந்நிலையில் கோத்தகிரி கடைவீதி பகுதியில் இன்று அதிகாலையில் ஒற்றை கரடி உலா வந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்து உள்ளனர். உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Video