குன்னூர் அருகே இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் ஜோடியாக உலா வரும் கரடிகள்

குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி கிராமத்தில் சாய்பாபா கோவில் செல்லும் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் இரண்டு கரடிகள் உலா வந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Share this Video

குன்னூர் பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் எடப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகில் வனப்பகுதியை ஒட்டி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் கரடி இரண்டு உலா வந்தது அங்குள்ள வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

வனவிலங்கு நடமாட்டம் குடியிருப்பு பகுதியில் அதிகமாக இருப்பதால் இப்பகுதி மக்கள் மற்றும் சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் வர பாதுகாப்புடன் வெளியே வருமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Related Video