Watch : பிரதமர் மோடியின் வருகையையொட்டி முதுமலை பகுதியில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு!

வரும் 9ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு பகுதிக்கு வருகை தர இருப்பதால் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் மசினகுடி தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
 

Share this Video

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் இரு குட்டி யானைகளை வளர்த்து ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை சந்திக்கும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 9ம் தேதி தெப்பக்காடு பகுதிக்கு வருகிறார். இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்கும் மசினகுடி பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் டிப்பர் லாரிகளை கொண்டு நடைபெற்று வருகிறது. இப்பகுதியையும் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்

Related Video