குன்னூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட எம்பி ஆ.ராசா

குன்னூரில் பெய்த கன மழையினால் சேதம் அடைந்த பகுதிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டனர்.

Share this Video

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது மேலும் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து குன்னூரில் உள்ள மேல் குன்னூர் பகுதி மற்றும் முத்தாலம்மன் பேட்டையைச் சேர்ந்த வீடுகள் சேதமடைந்தவர்கள் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஊட்டி குன்னூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள பெட்ரோல் பங்க் அருகே மண்சரிவுஏற்பட்ட பகுதியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் புஷணக்குமார், வட்டாச்சியர் கனி சுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Video