Ooty Rain : நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  அதிகாலை முதல் உதகை ,பந்தலூர், கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மின் உற்பத்திக்கு பயன்படும் அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. 

First Published Jul 5, 2022, 9:04 PM IST | Last Updated Jul 5, 2022, 9:04 PM IST

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காலம் ஆகும். இந்த ஆண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்காமல் சற்று தாமதமாக தற்போது துவங்கியுள்ளது. பரவலாக நீலகிரி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா மாநிலம் வயநாடு ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது கன மழையும் லேசான மழையும் மாறி மாறி பெய்து வருகிறது. அதேபோல் உதகை, நடுவட்டம் உட்பட  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா ஸ்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.கொட்டித் தீர்க்கும் மழையால் அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் மின் உற்பத்திக்குப் பயன்படுத்தும் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. தொடர் மழையால் நீர்வீழ்ச்சிகளில் மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் குளிர்  நிலவுகிறது.

Video Top Stories