மக்கள் மத்தியில் சிறந்த ஆளுமையாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த் - மத்திய அமைச்சர் உருக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது இறங்கலை பதிவு செய்தார்.

First Published Dec 28, 2023, 1:47 PM IST | Last Updated Dec 28, 2023, 1:47 PM IST

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கேப்டன் விஜயகாந்த் தமிழக அரசியல் மட்டுமின்றி திரைத்துறையில் சிறந்த தேசப்பற்றுள்ள நடிகராகவும், நாட்டிற்கு சேவை செய்யக்கூடிய திரைப்படங்களையும் நல்ல காவல்துறை அதிகாரியாகவும் மக்கள் மத்தியில் நல்ல ஆளுமை மிக்க தலைவராக இருந்து வந்துள்ளார்.

அவரது மறைவு என்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர், தேமுதிக கட்சியினர், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உதகையில் செய்தியாளர்களிடம் பேட்டி.

Video Top Stories