சொகுசு பங்களாவில் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை; சிசிடிவியில் பதிவான காட்சிகளால் பரபரப்பு

உதகை ஜெம் பார்க் சொகுசு விடுதி அருகில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் இரவு நேரத்தில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி அது தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Video

சமீப காலமாக நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இரவு நேரங்களில் சிறுத்தை, கரடி போன்றவை குடியிருப்பு பகுதியில் உலா வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், உதகை ஜெம் பார்க் சொகுசு விடுதியின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களாவில் இரவு நேரத்தில் வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி அது தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உதகை சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே அச்சத்துடன் நடமாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Video