குன்னூர் நெடுஞ்சாலையில் மண் சரிவால் சாலையில் விழுந்த மரங்கள்; போலீசாரின் நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு

குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு காரணமாக மரங்கள் சாலையில் விழுந்த நிலையில் காவல் துறையினரின் துரித நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் தப்பினர்.

Share this Video

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்த நிலையில் இன்று மழை இல்லாத நிலையிலும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நந்தகோபால் பாலம் அருகில் மண்சரிவு ஏற்பட்டு இரு மரங்கள் சாய்ந்து சாலையில் விழும் நேரடி காட்சி வெளியாகி உள்ளது.

வாகனங்கள் மண் சரிவில் சிக்காமல் இருக்க குன்னூர் வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு அளித்தனர். இதனால் மண் சரிவிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அதிஷ்டவசமாக தப்பின.

Related Video