4 நாட்களுக்கு பின்னர் தொடங்கப்பட்ட மலை ரயில்; மண் சரிவால் இன்றும் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் மீண்டும் மலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

First Published Nov 9, 2023, 11:09 AM IST | Last Updated Nov 9, 2023, 11:09 AM IST

குன்னூர் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கன மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான ரயில் பாதையில் கடந்த சனிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரு நாள் மட்டும் ரயில் இயக்கப்பட்டது. அப்பொழுதும் நேற்று மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில் பாதையில்  ஹில்கிரோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் குன்னூருக்கு 10.20 மணிக்கு வரவேண்டிய ரயில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தடைந்தது. 

இதனை தொடர்ந்து நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் கல்லார் ஆடர்லி இடையேயான ரயில் பாதையில் பல இடங்களில் மண் அரிப்பு மற்றும் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் மீண்டும் மலை ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.