நீலகிரியில் பகல் நேரத்தில் சாலையோரம் குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் இரண்டு குட்டிகளுடன் உலா வரும் யானைக் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக பருவ மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், வனப்பகுதி மற்றும் சாலையோர வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு கிடைக்கும் வகையில் வனப்பகுதி மற்றும் சாலையோர வனப்பகுதி பசுமை நிறைந்து காணப்படுகிறது.
இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம், காட்டேரி பூங்கா அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டங்கள் அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வரத்தொடங்கி உள்ளன.
அந்த வகையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மூன்று குட்டிகளுடன் உலா வரும் யானைக் கூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சமடைந்துள்ள நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் உலா வரும் யானைக் கூட்டத்தை எவ்வித தொந்தரவும் செய்யாமல் மலைப்பாதையில் பயணிக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.