கூடலூரில் இரவு நேரங்களில் உலா வரும் காட்டு யானைகள் கடைகளை சேதப்படுத்தியதால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரம்பாடி பஜாரில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டு யானை காய்கறி கடைகளை சூரையாடிய சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Dec 7, 2023, 7:00 PM IST | Last Updated Dec 7, 2023, 7:00 PM IST

நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதியில் அதிகளவு காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானைகள் இரவு நேரங்களில் கிராம பகுதிகளில் வந்து வீடுகளை உடைப்பது, ரேசன் கடைகளை சேதப்படுத்துவது என அடுத்தடுத்த சம்பவம் நடந்த வண்ணமே உள்ளது. இப்படி  அட்டகாசம் செய்யும் யானைகளை வனத்துறையினர் விரட்டி விட்டாலும் மீண்டும் ஊருக்குள் வருகிறது.

இந்நிலையில் பந்தலூரை அடுத்துள்ள  சேரம்பாடி பகுதியில் சம்சுதின் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மளிகைக்கடையை நேற்று இரவு ஊருக்குள் உலா வந்த காட்டு யானை சேதப்படுத்தி உள்ளது. பின்பு கடையில் உள்ள காய்கறி, மளிகை பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தியது. காட்டுயானை உடைக்கும் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கூச்சலிட்டு யானையை விரட்டினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.