உன்னோட அவசரத்துக்குலாம் போக முடியாது; பொறுமையா தான் போவோம் - பேருந்தை வழிமறித்து மிரட்டிய யானை

நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை பேருந்தில் இருந்தவர்களை மிரட்டும் வகையில் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூர் பகுதியில் இருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய அரசு பேருந்து கெத்தை முள்ளி வெள்ளியங்காடு மார்க்கமாக நாள்தோறும் சென்று வருகிறது. இன்று காலை கோவை நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து கெத்தை அருகே சென்ற பொழுது சாலையில் குட்டியுடன் ஐந்து காட்டு யானைகள் நின்றது. 

இதனை கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். கடைசியில் சென்ற ஆண் யானை பேருந்தை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தது. இதனை பார்த்த அரசு பேருந்து ஓட்டுநர் பயத்தில் பேருந்தை அப்படியே நிறுத்திவிட்டார். ஆனாலும் அந்த யானை மீண்டும் திரும்பிப் பார்த்த வாரே மிரட்டிய வண்ணமே சென்றது. இதனை பேருந்தில் பயணித்தவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

Related Video