நானும் ரௌடி தான்; சாலையின் ஓரமாக இருந்த இரும்பு கம்பியை உடைத்து காட்டு யானை அட்ராசிட்டி

நீலகிரியின் நடு கூடலூர் பகுதியில் திடீரென ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை பிடிங்கி எறிந்து அட்டகாசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Nov 30, 2023, 9:27 AM IST | Last Updated Nov 30, 2023, 9:27 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடு கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் நேற்றைய தினம் ஒற்றை யானை ஒன்று அப்பகுதியில் நடமாடியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் ஒற்றை யானை வாயில் வாழை கன்றுகளை கடித்தவாறு சென்ற பொழுது சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பை, எவன்டா இது என் பாதையில் வைத்தது என்பது போல் ஆக்ரோஷமாக தள்ளி விட்டு விட்டு மீண்டும் கூடலூர் சாலையில் ஹாயாக பயணித்தது இதன் சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது.

Video Top Stories