மலை ரயிலை வழிமறித்து சுற்றுலா பயணிகளுக்கு பாய் சொன்ன காட்டு யானை

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கிச் சென்ற மலை ரயிலை காட்டு யானை வழி மறித்த நிலையில், சுற்றுலாப்பயணிகள் யானையை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

First Published Aug 8, 2023, 4:44 PM IST | Last Updated Aug 8, 2023, 4:44 PM IST

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை ஏழு மணி அளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த மலை ரயிலை குன்னூர் அருகே உள்ள மரப்பாலம் பகுதியில் காட்டு யானை வழிமறித்தது. இதனால் ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்பு காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் ரயில் ஓட்டுந குன்னூர் நோக்கி ரயிலை இயக்கினார். இதனால் அரை மணி நேரம் ரயில் தாமதமாக குன்னூர் வந்து அடைந்தது. ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் காட்டு யானையை வீடியோ பதிவு செய்து மகிழுந்தனர்.

Video Top Stories