யானைகளை துரத்திச் சென்ற வாகன ஓட்டிகள்; ஒரே பார்வையில் அனைவரையும் அலறவிட்ட காட்டு யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரவில் சாலையில் உலா வந்த காட்டு யானைகளை வாகன ஓட்டி ஒருவர் ஒலி எழுப்பியவாறு துரத்திய நிலையில், ஆவேசமடைந்த யானை திடீரென பதிலுக்கு துரத்தத் தொடங்கியதால் வாகன ஓட்டி அச்சமடைந்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியாகும். இதனால் இப்பகுதிகளில் வனவிலங்குகள், குறிப்பாக காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி என அனைத்து வகையான விலங்குகளும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் வளம் வருவது வாடிக்கையாக உள்ளது,
இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஐயன் கொல்லி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே நேற்று இரவு 3 காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. இதனை கண்ட வாகன ஓட்டிகள் காட்டு யானைகளை பின்தொடர்ந்து ஒலி எழுப்பி யானைகளை விரட்டினர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானைகள் வாகனத்தை துரத்த தொடங்கியது.
அப்போது வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதால் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் வனத்துறையினர் வனப்பகுதியை சுற்றி அகழி வெட்ட வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக உள்ளது.