Asianet News TamilAsianet News Tamil

ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தேனீர் கடைக்காக வாங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் வெள்ளை நிற புழுக்கள் மிதந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டகளை வாங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடைக்கு வந்து பாலை பாத்திரத்தில் ஊற்றியுள்ளார். அப்பொழுது பால் முழுவதும் வெள்ளை புழுக்கள் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி பாக்கெட் மட்டும் பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பாக்கெட்டை சோதனை செய்த பொழுது பாக்கெட் இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கையில், நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த எண் கொண்ட ஆவின் பால் பாக்கெட்களை ஆய்வு செய்ய உள்ளோம். தொடர்ந்து இதனை அடுத்து ஆய்வு அறிக்கை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். அரசின் தயாரிப்பான ஆவின் பாலில் புழுக்கள் மிதந்த சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories