ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் முதுமலையில் வளர்ப்பு யானைகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு வைரலாகி வருகிறது.

Share this Video

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்திய நாட்டின் குடியரசு தின விழா இன்று காலை 9 மணிக்கு வனத்துறையினர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். வனசரகர் மேகலா தேசிய கொடி ஏற்றினார்.

அப்போது வளர்ப்பு யானைகள் தும்பிக்கைகளை தூக்கிப் பிளிறியவாறு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. குடியரசு தின விழாவில் வன சரகர்கள் மனோஜ், விஜயன் உள்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வனத்துறையினர் இனிப்புகள் வழங்கினர். பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

Related Video