Watch : ஆனைமலை முகாமில் வளர்ப்பு யானைகள் உற்சாக குளியல்! - என்ன ஒரு ஆட்டம்!
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் இருக்கும் யானைகள் கோடை வெயிலை தவிர்க்க உற்சாக குளியலில் ஈடுபட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. இங்கு 26 யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானைகளை அடக்கும் கும்கிகள் சின்னத்தம்பி, அரிசி ராஜா என்கிற முத்து உள்ளது. யானைகளின் அரசன் கூறப்படும் கும்கி கலீம் தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்து உள்ளதால் யானைகள் வளர்ப்பு முகாம் அருகேயுள்ள மாயாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. யானைகளை பராமரிக்கும் மாவுத், காவடிகள் வளர்ப்பு யானைகளை ஆற்றிற்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி வருகின்றனர்.
டாப்ஸ்லிப் வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனம் மூலம் யானைகள் வளர்ப்பு முகமுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.