செண்டை மேளம் முழங்க கதகளி நடமாடி ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய மாணவிகள்
நீலகிரி மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் மாணவிகள் நடனமாடி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகின்ற 29ம் தேதி மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாட இருப்பதால் தனியார் கல்லூரி மாணவிகள் ஓணம் பண்டிகையை உற்சாகமாக நடனங்கள் ஆடி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் கேரளா செண்டை மேளம், கதகளி மற்றும் கேரளா பாரம்பரிய உடைகள் அணிந்து கல்லூரியின் வாசலில் பூக்களால் கோலமிட்டு கேரளா பாரம்பரிய நடனங்கள் ஆடி ஓணம் பண்டிகையை முன்கூட்டியே கொண்டாடினர்.