Asianet News TamilAsianet News Tamil

நீலகிரியில் யானை பொங்கல் விழா கோலாகலம்; உறியடித்து மகிழ்ந்த ஆட்சியர் அருணா

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற யானை பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உலகத்தில் உள்ள தமிழர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வனத்துறையினர்  மற்றும் பழங்குடியினர் மக்களால் பொங்கல் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. 

இந்த பொங்கல் விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசையுடன் பொங்கல் விழா தொடங்கியது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் உறியடித்தல் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வளர்ப்பு  யானைகளுக்கு மிகவும் பிடித்த பொங்கல், அண்ணாச்சி, கரும்பு, தேங்காய் போன்ற பழங்களுடன் உணவு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உட்பட அனைவருக்கும் வனத்துறை சார்பில் பொங்கல் வழங்கப்பட்டது.

Video Top Stories