குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக உலா வரும் கருஞ்சிறுத்தை; கோத்தகிரியில் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கருஞ்சிறுத்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Dec 8, 2023, 3:33 PM IST | Last Updated Dec 8, 2023, 3:33 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று இன்று காலை உலா வந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தைகளை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளர்.

Video Top Stories