Asianet News TamilAsianet News Tamil

நீலகிரியில் செந்நாய்களிடம் இருந்து குட்டியை காப்பாற்ற அரண்களாக மாறிய மாடுகள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

நீலகிரி மாவட்டத்தில் செந்நாய்களிடம் இருந்து காப்பாற்ற எருமை மாடுகள் கன்றுக்கு அரணாக மாறிய நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களாக பல நூற்றாண்டை கடந்து வாழ்ந்து வரும் தோடர் பழங்குடியினர் மக்கள் தங்களது குலதெய்வமாக எருமைகளை வழிபட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எருமைகள் முக்கிய கால்நடைகளாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு தோடர் பழங்குடியின மக்களும் வீட்டிற்கு பத்து எருமைகளை வளர்த்து வருகின்றனர். அவ்வாறு உதகை அடுத்த பைக்காரா புல்வெளியில்  பத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு எருமைகள் புல்வெளி மைதானத்தில் மேச்சலில் ஈடுபட்ட போது வனப்பகுதியில் இருந்து இறைத் தேடி வந்த  25க்கும் மேற்பட்ட செந்நாய்கள், எருமை கூட்டத்தில் புதிதாக ஈன்ற குட்டியை வேட்டையாட முயன்றது. இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட அனைத்து எருமைகளும் ஒன்றுகூடி குட்டியை பாதுகாத்து செந்நாய்களை விரட்டியது காண்போரை நெகிழ வைத்தது.

Video Top Stories