Watch : கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மீண்டும் ஒருவர் பலி! பீதியில் மக்கள்!
கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மீண்டும் ஒருவர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மலை மற்றம் வனப்பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் காட்டு யானைகள் புலிகள் சிறுத்தைகள் கரடி என பல காட்டு விலங்குகள் வசிக்கும் பகுதியாகும். மேலும் முதுமலை புலிகள் காப்பகம் ஒட்டி உள்ள பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.
இந்நிலையில் தேவர் சோலை அடுத்த செம்பக் குழி பகுதி அருகே உள்ள சிறுமுள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான குட்டன் (வயது 49) என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தேவர் சோலை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் குட்டணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டு யானைகள் தாக்குதலால் தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதிடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.