Asianet News TamilAsianet News Tamil

Watch : பலாப்பழம் பறித்து தின்ற காட்டுயானை! - ஜாலி உலா வந்த சிறுத்தையால் மக்கள் பீதி!

குன்னூர் அருகே சாலையில் நடந்து சென்ற யானைகள் பலாப் பழத்தை பறித்து தின்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சுற்றித்திரிந்த மூன்று காட்டு யானைகள் நேற்று வனத்துறையினரால் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது,

நஞ்சப்பசத்திரம் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை குன்னூர் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனக் குழுவினர் 13 வது கொண்டை ஊசி வளைவு மற்றும் 12வது கொண்டு ஊசி வளைவு பகுதியில் விரட்டினர் அப்பொழுது சாலையை கடந்து சென்ற மூன்று காட்டு யானைகள் மரப்பாலம் கடந்து கே என் ஆர் பகுதிக்குள் நுழைந்தது. பின்ன், குறும்பா காட்டேஜ் பகுதியில் நுழைந்த யானைகள், பலாமரத்தில் கால் வைத்து பலாப்பழத்தை பறித்து தின்றது. இதை வனத்துறையினர் வீடியோ பதிவு செய்தனர்.

இதனிடையே, மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு பகுதியில் சிறுத்தை நுழைந்தது. பட்டப்பகல் வேளையிலும் சிறுத்தை ஜாலியாக ஊருக்குள் வலம் வந்தது. அப்பகுதி மக்கள் சத்தங்களை எழுப்பி ஒருவிழாயக சிறுத்தையை விரட்டினர்.

Video Top Stories